உலகப் பொருளதாரத்தின் இயந்திரமாக மாறியுள்ள சீனப் பொருளாதாரம்
2022-08-10 15:00:11

ஐந்து கண்டங்களில் உள்ள 22 நாடுகளில் மேற்கொண்ட ஒரு உலகளாவிய பொது மக்கள் கருத்து கணிப்பின் படி, கடந்த பத்து ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சி சாதனைகளை பெரும்பாலான வெளிநாட்டு மக்கள் பெரிதும் பாராட்டுகின்றனர். இதில் சீனப் பொருளாதாரம், உலகப் பொருளதாரத்தின் இயந்திரமாக மாறி, உலகப் பொருளாதாரத்துக்கு நம்பிக்கையையும் உயிராற்றலையும் ஊட்டுகின்றது என்று 78.34 விழுக்காட்டுப் பேர் கருத்து தெரிவித்தனர்.

சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த சிஜிடிஎன் சிந்தனைக் குழு மற்றும் சீனாவின் ரென்மின் பல்கலைக்கழகத்தின் தேசிய ஆளுமை மற்றும் பொதுக் கருத்து சூழலியல் நிறுவனம் ஆகியவை இந்த ஆய்வைத் தொடங்கியுள்ளன.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி முதலிய வளர்ந்த நாடுகளின் மக்களும், பிரேசில், அர்ஜென்டினா, இந்தியா, பாகிஸ்தான் முதலிய வளரும் நாடுகளின் மக்களும் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

இந்த முடிவின் படி, சீனாவின் பொருளாதார சாதனைகளை 91.46 விழுக்காட்டு ஆப்பிரிக்க மக்களும் 81.60 ஐரோப்பிய விழுக்காட்டு மக்களும் வெகுவாகப் பாராட்டினர்.

விசாரணைபடுத்தப்பட்ட மக்களின் சராசரி வயது 38.64 வயதாகும். 54.71 விழுக்காட்டு விசாரணைபடுத்தப்பட்ட மக்கள் இளங்கலை பட்டம் அல்லது அதற்கும் மேலே பட்டம் பெற்றவர்களாவர்.