இந்தியாவில் 5ஜி அலைக்கற்றின் ஏலம் தொடங்கியது
2022-08-10 14:52:50

கடந்த வாரம், இந்திய அரசாங்கம் 72 ஜிகாஹெர்ட்ஸ், 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் விடுவதாக அறிவித்தது. இந்த நடவடிக்கையின் மூலம் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் வெளியிடுவதற்கான பந்தயம் தொடங்கியுள்ளது.

மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின்படி, மொத்தத்தில் 71 விழுக்காடான 51 ஜிகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஏல மதிப்பு 1,880 கோடி அமெரிக்க டாலர்களை எட்டியது.

ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் அதானி டேட்டா வொர்க்ஸ் லிமிடெட் ஆகிய நான்கு முக்கிய இந்திய நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன.

இவ்வாண்டின் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதத்தில், இந்தியாவில்  5ஜி சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாண்டின் இறுதிக்குள் இந்த சேவை நாட்டின் 20-25 மாநகரங்கள் மற்றும் நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று ஜூன் மாதத்தில், இந்தியாவின் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.

இந்தியாவில், தற்போதைய தரவு விலைகள் உலகளாவிய சராசரியை விட கணிசமாகக் குறைவாக இருப்பதால், புதிய சேவைகள் வெளியிடப்படும்போது, விகித வரையறைகள் நிர்ணயிக்கப்படும் என்று அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.