சீன மக்களின் விவகாரங்களைச் சீன மக்களே முடிவு செய்ய வேண்டும்
2022-08-11 10:24:30

தைவான் பிரச்சினை மற்றும் புதிய யுகத்தில் சீனாவின் ஒன்றிணைப்பு என்ற வெள்ளையறிக்கையைச் சீனா ஆக்ஸ்ட் 10ஆம் நாள் வெளியிட்டது. சீன மக்களின் விவகாரங்களைச் சீன மக்களே முடிவு செய்ய வேண்டும் என்று இந்த வெள்ளையறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவான் பிரச்சினை சீனாவின் உள் விவகாரமாகும். சீனாவின் முக்கிய நலன்கள் மற்றும் சீன மக்களின் தேசிய உணர்வுகளுடன் தொடர்புடையது, வெளிநாடுகளின் எந்த தலையீட்டையும் அனுமதிக்க முடியாது.

இந்த வெள்ளையறிக்கை, பெலோசியின் தைவான் வருகைக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, புதிய யுகத்தில் தைவான் பிரச்சினையைத் தீர்க்கும் சீனாவின் ஒட்டுமொத்த நெடுநோக்குத் திட்டத்தையும் வெளிப்படுத்தி, ஆசிய-பசிபிக் பிரதேச மற்றும் உலகச் செழுமைக்கும் நிதானத்துக்கும் நேர்மறையான ஆற்றல் ஊட்டியுள்ளது.

ஆளும் கட்சியான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, எப்போதுமே தைவான் பிரச்சினையைத் தீர்ப்பது, தாய்நாட்டின் ஒன்றிணைப்பை நனவாக்குவது ஆகியவற்றின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளது.

மேலும்,“ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள்” என்ற கொள்கையின் படி தைவான் நீரிணை இருகரைகளின் அமைதியான ஒன்றிணைப்பை நனவாக்க வேண்டும் என்பது முதன்முறையாக முன்வைக்கப்பட்டது.