2022ம் ஆண்டு உலக 5 ஜி மாநாடு சீனாவில் துவக்கம்
2022-08-11 09:43:01

2022ம் ஆண்டு உலக 5 ஜி மாநாடு சீனாவின் ஹால்பின் நகரில் 10ஆம் நாள் துவங்கியது. சீன அரசவை உறுப்பினர் வாங் யொங் அதன் துவக்க விழாவில் கலந்து கொண்டு உரைநிகழ்த்தினார்.

வாங் யொங் கூறுகையில், கூட்டுக் கலந்தாய்வு, கூட்டுக் கட்டுமானம் மற்றும் கூட்டுப் பகிர்வு என்ற கோட்பாடுகளுக்கிணங்க, இணையக் கட்டுமானம், வரையறையை வகுப்பது முதலிய துறைகளில் சர்வதேசப் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் சீனா ஆழமாக்கும். தற்போது சீனாவில் 5 ஜி இணைய நிலையங்களின் எண்ணிக்கை, 18.54 இலட்சத்தை எட்டியது. 5 ஜி பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 45 கோடியைத் தாண்டி, உலகளவில் மொத்த 5 ஜி பயன்பாட்டாளர்களில் 60 சதவீதத்துக்கும் மேல் வகிக்கிறது. 5 ஜி முதலீட்டுத் தொகை, 40 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது என்று அறிமுகப்படுத்தினார்.