அமெரிக்க ஆட்சிக்கு உலகம் தொடர்ந்து உட்படும்:6.31% மக்கள்
2022-08-11 14:30:23

சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த சிஜிடிஎன் சிந்தனைக் குழு மற்றும் சீனாவின் ரென்மின் பல்கலைக்கழகத்தின் தேசிய ஆளுமை மற்றும் பொதுக் கருத்து சூழலியல் நிறுவனம் ஆகியவை, “புதிய யுகத்தில் சீனா” என்ற உலகளாவிய பொது மக்கள் கருத்துக் கணிப்பை நடத்தின. இதன் முடிவின்படி, அமெரிக்க ஆட்சிக்கு உலகம் தொடர்ந்து உட்படும் என்று 6.31 விழுக்காட்டுப் பேர் மட்டும் கருத்து தெரிவித்தனர்.

கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 56.22 விழுக்காட்டினரின் கருத்தில், சீனாவின் செழுமை வளர்ச்சியால், குறிப்பிட்ட சில நாடுகளுக்கு ஏற்பட்ட நிர்ப்பந்தம் மற்றும் கவலை, “சீன அச்சுறுத்தல்”என்ற கூற்றை அவை பரப்புரை செய்வதற்கான காரணமாகும் என்று குறிப்பிடப்பட்டது.