தைவான் நீரிணை நிலைமை பற்றி வாங்யீ முன்வைத்த 3 எச்சரிக்கைகள்
2022-08-11 14:35:48

தைவான் நீரிணை நிலைமை பற்றி 3 ஆபத்தான வளர்ச்சிப் போக்குகளின் மீது விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ அண்மையில் எச்சரித்துள்ளார்.

முதலாவதாக, புதிய மேலும் நெருக்கமான நிலைமையை அமெரிக்கா உருவாக்கக் கூடும் என்பதைக் கவனிக்க வேண்டும்.

இரண்டாவதாக, தைவான் பிரிவினை சக்தி நாட்டையும் தேசத்தையும் பிரிக்கும் பாதையில் தொடர்ந்து தன்னிச்சையாக செயல்படுவதில் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

மூன்றாவதாக, குறிப்பிட்ட சில நாடுகளின் அரசியல்வாதிகள் நடைமுறை உண்மைகளைப் புறக்கணித்து சுய நலன்களைப் பெறும் விதம் சீனாவுடனான தூதாண்மை உறவுக்கான அரசியல் அடிப்படையையும் 2ஆவது உலகப் போருக்குப் பிந்தைய சர்வதேச அமைப்புமுறையையும் சீர்குலைப்பதில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வாங்யீ சுட்டிக்காட்டினார்.