இலங்கையில் குரங்கம்மை பரிசோதனை துவக்கம்
2022-08-11 09:30:32

இலங்கையில் குரங்கு அம்மை நோய் தொற்று பரவியுள்ளதா இல்லையா என்பதைக் கண்டறியும் வகையில் சுகாதார பணியாளர்கள் பொது மக்களுக்கு குரங்கு அம்மை பரிசோதனை செய்யத் துவங்கியுள்ளனர்.

அந்நாட்டின் சுகாதார அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் புதன்கிழமை சின்குவா செய்தியாளருக்குப் பேட்டியளிக்கையில்,

உலக சுகாதார அமைப்பிடமிருந்து உரிய பரிசோதனை கருவிகளை பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். தலைநகர் கொழும்பு மற்றும் கண்டி நகரில் பரிசோதனை முதலில் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது.

இலங்கையில் இதுவரை குரங்கம்மை நோய் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.