வாங்யீ-நேபாள வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை
2022-08-11 09:28:52

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 10ஆம் நாள் சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள நேபாள வெளியுறவு அமைச்சர் நரயன் காட்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வாங்யீ கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நேபாளத்தில் பயணம் மேற்கொண்ட போது கிடைத்த சாதனைகளைச் செயலாக்கி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டப்பணியைக் கூட்டாகக் கட்டியமைத்து, இரு நாட்டுறவின் புதிய எதிர்காலத்தைத் திறந்து வைத்து, நேபாள அரசுடன் இணைந்து பாடுபட சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.

காட்கா கூறுகையில், நேபாள-சீன நட்புறவு தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வருகிறது. இரு தரப்பினரும் எப்போதும் சமமாகப் பழகிக் கொண்டு, ஒன்றுக்கொன்று மதிப்பு அளித்து வருகின்றன. நேபாளம், ஒரே சீனா என்ற கொள்கையில் ஊன்றி நிற்கிறது. மேலும், திபெத், சின்ச்சியாங், ஹாங்காங் முதலிய உள்விவகாரங்களில், சீனாவின் நியாயமான நிலைப்பாட்டுக்கு நேபாளம் ஆதரவளித்து வருகிறது என்று வலியுறுத்திப் பேசினார்.