ஜூலையில் அமெரிக்காவின் நுகர்வோர் விலை குறியீடு 8.5விழுக்காடு அதிகரிப்பு
2022-08-11 16:31:18

அமெரிக்க தொழிலாளர் அமைச்சகம் 10ஆம் நாள் வெளியிட்ட தரவின்படி, ஜூலை மாதத்தில் அமெரிக்காவின் நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த ஆண்டு ஜூலையில் இருந்ததை விட, 8.5விழுக்காடு அதிகமாகும். இந்த அதிகரிப்பு தொடர்ந்து கடந்த 40ஆண்டுகளில் இல்லாத அளவில் உச்சத்தில் உள்ளது.

அந்நாட்டின் விலைவாசி உயர்வு மெதுவாக மாறி வருகிறது. ஆனால், உணவுப் பொருட்களின் விலை மற்றும் வீட்டு வாடகை இன்னும் அதிகமாகவே உள்ளது. பண வீக்கமும் இன்னும் கடுமையாக உள்ளது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.