சீன-கிழக்காசிய ஒத்துழைப்பு தொடர்பாக வாங்யீ பேட்டி
2022-08-12 15:24:24

சீன அரசவை உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, அண்மையில் கம்போடியா, வங்காளத் தேசம், மங்கோலியா ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொண்டார். அத்துடன் சீனாவின் ட்சிங் தாவ் நகரில் தென்கொரிய மற்றும் நேபாள வெளியுறவு அமைச்சர்களைச் சந்தித்தார். 11ஆம் நாள் அவர் சீனாவின் முக்கிய ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார்.

சீன-ஆசியான் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவு குறித்து, அவர் கூறுகையில், ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் ஒன்றுகூடி, அமைதி, வளர்ச்சி மற்றும் நிதானத்தை நாடும் விருப்பத்தைத் தெரிவித்து, சர்வதேச நியாயத்தைப் பேணிக்காக்கும் மனவுறுதியைக் காட்டியுள்ளோம் என்று தெரிவித்தார்.

அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் தலைவர் பெலோசி தைவானில் பயணம் மேற்கொண்டது குறித்து, வாங்யீ கூறுகையில், பல்வேறு தரப்புகளுக்கு உண்மை மற்றும் சீனாவின் நிலைப்பாட்டை விளக்கிக் கூறி, நியாயமற்ற குற்றச்சாட்டுக்குப் பதிலளித்து, நாட்டின் இறையாண்மையைப் பேணிக்காத்தோம் என்று தெரிவித்தார்.

மேலும், கம்போடியா, வங்காளத் தேசம், மங்கோலியா, தென்கொரியா, நேபாளம் ஆகிய நாடுகளுடன் எட்டியுள்ள பொது கருத்துகளை வாங்யீ செய்தியாளர்களிடம் அறிமுகம் செய்தார்.