சர்வதேச சமூகம் உலக வளர்ச்சி கூட்டுறவை உருவாக்க ஷிச்சின்பிங் அழைப்பு
2022-08-12 17:06:28

உலக வளர்ச்சி முன்னெடுப்பு குறித்து பன்னாட்டு சிவில் சமூக ஒற்றுமை மாநாட்டிற்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 12ஆம் நாள் வாழ்த்து கடிதம் அனுப்பினார்.

அதில் ஷிச்சின்பிங் குறிப்பிடுகையில், வளர்ச்சி என்பது மனித சமூகத்தின் நித்தியமான கருப்பொருளாகும். வளர்ச்சி மூலம் அருமையான வாழ்க்கையை பன்னாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போது, உலகப் பொருளாதார வளர்ச்சியில் பல காரணங்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிலையான வளர்ச்சிக்கான ஐ.நா 2030ஆம் ஆண்டு நிகழ்ச்சி நிரலின் நடைமுறையாக்கத்தில் தடை காணப்பட்டுள்ளது. இன்னல் மற்றும் அறைகூவலை எதிர்கொண்டு, நாம் ஒருங்கிணைத்து செயல்பட்டு, வளர்ச்சியை மேம்படுத்தி நிலையான வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலைப் பயனுள்ளதாக நடைமுறையாக்க வேண்டும். இதன் மூலம் அனைவரும் நல்ல வாழ்க்கையை வாழ முடியும் என்று சுட்டிக்காட்டினார்.

சர்வதேச சமூகம் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான ஒருமித்த கருத்துக்களைச் சேகரித்து, உலக வளர்ச்சிக் கூட்டுறவை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்ட ஷிச்சின்பிங், உலக வளர்ச்சி  முன்னெடுப்பு என்பதை நடைமுறையில் கொண்டு வருவதற்கு மக்களின் விருப்பம் போன்ற ஆதாரத்தை பன்னாட்டு சிவில் சமூகம் வழங்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.