தாய்லாந்துக்குச் சென்ற கோத்தப்பய ராஜபாட்ச
2022-08-12 10:47:24

இலங்கையின் முன்னாள் அரசுத் தலைவர் கோத்தப்பய ராஜபாட்ச 11ஆம் நாள் பிற்பகல் சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் தாய்லாந்துக்குப் புறப்பட்டதாக சிங்கப்பூர் குடியேறுவோர் மற்றும் சோதனைச் சாவடிகள் பணியகம் வியாழக்கிழமை உறுதி செய்தது.

கடந்த ஜுலை 14ஆம் நாள் மாலதீவு வழியாக ராஜபாட்ச தனியார் பயணம் என்ற பெயரில் சிங்கப்பூர் சென்றடைந்தார். அவர் அடைக்கலம் கேட்கவில்லை என்று சிங்கப்பூரின் காவற்துறையும் வெளியுறவு அமைச்சகமும் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து சிங்கப்பூரில் தங்கியிருந்த அவருடைய விசாவை அந்நாட்டு அரசு ஒரு முறை நீட்டித்திருந்தது. ஆனால், அதுவும் ஆகஸ்ட் 11ஆம் நாள் காலாவதியாகிவிட்டது.