அறிவியல் தொழில் நுட்ப ஆதிக்கத்தில் ஈடுபடும் அமெரிக்கா
2022-08-12 12:35:29

சில்லுகள் மற்றும் அறிவியல் சட்டத்தில் அமெரிக்க அரசுத் தலைவர் ஜோன் பைடன் கையொப்பமிட்டார். சுமார் 28 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள வெறுமையான திட்டப்பணியை வழங்குவதன் மூலம், முன்னேறிய சில்லு தயாரிப்புத் தொழில் நிறுவனங்களை ஈர்த்து, தனது அறிவியல் தொழில் நுட்பத்துக்கான ஆதிக்கத்தை அமெரிக்கா பேணிக்காக்க முயலும்.

தரவுகளின்படி, 1990ஆம் ஆண்டு, உலகத்தின் அரை மின் கடத்தி தயாரிப்புத் தொழிலில், அமெரிக்கா 37 விழுகாடு வகித்தது. 2020ஆம் ஆண்டு இந்த விகிதம் 12 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

இதனிடையில், கடந்த சில ஆண்டுகளாக, சீனா உள்ளிட்ட சில நாடுகள் அரை மின் கடத்தி தயாரிப்புத் துறையில் முன்னேற்றங்களைப் பெற்று வருகின்றன. இதற்கு அமெரிக்கா கவலைப்பட்டுள்ளது.

பனிப் போர் சிந்தனையுடன், சில்லு தொழில் துறைக்கான பாதுகாப்புக் கொள்கையை அமெரிக்கா உருவாக்கியது.

அரசியல் தலையீட்டு வழிமுறை, சந்தையின் ஒழுங்குமுறையை மீறியது. கடந்த நூற்றாண்டின் 80ஆவது ஆண்டுகளில், ஜப்பானின் அரை மின் கடத்தி தயாரிப்புத் தொழிலின் மீது அமெரிக்கா அடக்கியது. அதைப் போல், 2013 மற்றும் 2014ஆம் ஆண்டு, பிரான்ஸ் ஆல்ஸ்டோம் நிறுவனத்தை அமெரிக்கா பிளவுபடுத்தியது. அதனால், பிற நாடுகளின் சில்லு தயாரிப்பு நிறுவனங்கள் அமெரிக்காவின் பொய் வாக்குறுதியால் ஈர்க்கப்பட்டால், அவற்றின் எதிர்கால வளர்ச்சி கவலைக்கிடமாக உள்ளது.