நாளுக்கு சராசரி 83விழுக்காடான சிரியாவின் எண்ணெய் திருடி கடத்திய அமெரிக்கப் படை
2022-08-12 16:15:32

சிரிய செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, சிரியாவில் சட்டவிரோதமாக களமிறங்கிய அமெரிக்கப் படை 11ஆம் நாள் 144 டேங்கர் லாரி மூலம் அந்நாட்டில் திருடிய எண்ணெயை ஈராக்கிற்குக் கடத்திச் சென்றது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் அமெரிக்கப் படை, சிரியாவிலிருந்து எண்ணெய் திருடி அனுப்பியது இதுவே 3ஆவது முறையாகும.

2022ஆம் ஆண்டின் முன்பாதியில் சிரியாவில் நாளுக்கு சராசரி எண்ணெய் உற்பத்தியளவு சுமார் 80300 பீப்பாய் ஆகும். சிரியாவின் வடகிழக்குப் பகுதியிலிருந்து அமெரிக்கப் படை சுமார் 66ஆயிரம் பீப்பாய் எண்ணெயைத் திருடியது. இது சிரியாவில் நாளுக்கு சராசரி எண்ணெய் உற்பத்தியின் 83விழுக்காட்டுக்கு சமமானது என்று  சிரிய எண்ணெய் மற்றும் கனிம வள அமைச்சகம் 9ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் குற்றஞ்சாட்டியது.