குரங்கம்மை நோய் தடுக்க தவறிய அமெரிக்க அரசுக்குக் குற்றச்சாட்டு
2022-08-12 10:14:10

அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் 10ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, அமெரிக்காவில் குரங்கு அம்மை நோயால் 10 ஆயிரத்து 392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, உலகின் மொத்த தொற்று எண்ணிக்கையில் 32 விழுக்காடு வகிக்கிறது என்று குறிப்பிடப்பட்டது. குரங்கம்மை நோய் தடுப்பூசிகளைச் செலுத்தும் வழிமுறை மாற்றத்துக்குத் தொடர்புடைய வாரியம் 9ஆம் நாள் அனுமதி வழங்கியது. புதிய வழிமுறையின்படி, ஐந்தில் ஒரு பகுதி தடுப்பூசி மருந்து மட்டும் தேவைப்படும். மேலும் பரிசோதனை பற்றாக்குறையால், குரங்கம்மை தொற்று எண்ணிக்கை குறைவாக மதிப்பிடப்படக் கூடும் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நோய் தடுக்க தவறிய அமெரிக்க அரசு, பொது சுகாதார நிபுணர்கள் மற்றும் ஊடகங்களின் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. கொவிட்-19 நோய் சந்தித்த போது ஒரே தவற்றை அமெரிக்க அரசு இழைத்து வருகிறது என்று குற்றம் சாட்டப்பட்டது.