ஜூலை மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 6.71 விழுக்காடாக குறைவு!
2022-08-13 17:38:43

இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஜூலை மாதத்தில் 6.71 விழுக்காடாக குறைந்துள்ளதாக புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் ஜூன் மாதத்தில் 7.75 விழுக்காடாக இருந்த உணவுப் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 6.75 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் மார்ச் மாதத்திற்குப் பிறகு மிகக் குறைவாக உள்ளது. ஆனால் இந்திய மத்திய வங்கியின் உச்ச வரம்பை விட அதிகமாக உள்ளது என்று அறிக்கைகள் கூறுகின்றன.