உலக வளர்ச்சி முன்னெடுப்பு குறித்து பன்னாட்டு சிவில் சமூக ஒற்றுமை மாநாடு நடைபெற்றது
2022-08-13 16:41:01

உலக வளர்ச்சி முன்னெடுப்பு குறித்து பன்னாட்டு சிவில் சமூக ஒற்றுமை மாநாடு  சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிநாட்டுத் தொடர்புத் துறை அமைச்சகத்தின் வழிகாட்டலுடன், சர்வதேச பரிமாற்றத்துக்கான சீன அரசு சாரா அமைப்புகளின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ஆகஸ்ட் 12ஆம் நாள் காணொளி வழியாகவும் நேரடியாகவும் நடைபெற்றது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளர் ஷி ச்சின்பிங், டோக் அரசுத் தலைவர், பாகிஸ்தான் தலைமை அமைச்சர், டோமினிகா தலைமை அமைச்சர் ஆகியோர் இம்மாநாட்டுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினர்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிநாட்டுத் தொடர்பு துறை அமைச்சர் லியு ச்சியன் சாவ் கூறுகையில்,

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் முன்வைத்த உலக வளர்ச்சி முன்மொழிவுக்கு, சர்வதேச சமூகத்தின் ஆக்கப்பூர்வமான மறுமொழி மற்றும் பங்கேற்பு கிடைத்துள்ளது. சர்வதேச அரசு சாரா சமூகம், உலக வளர்ச்சி கூட்டுறவைக் கட்டியமைக்கும் முக்கிய ஆற்றலாகும் என்றார்.