12வது பெய்ஜிங் சர்வதேசத் திரைப்பட விழா துவக்கம்
2022-08-13 16:55:15

சீனத் தேசிய திரைப்படப் பணியகத்தின் வழிகாட்டலில், சீன ஊடக குழுமம் மற்றும் பெய்ஜிங் மாநகர அரசு ஏற்பாடு செய்த 12வது பெய்ஜிங் சர்வதேசத் திரைப்பட விழா ஆகஸ்டு 13ஆம் நாள் துவங்கியது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணைத் தலைவரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவரும், நடப்புத் திரைப்பட விழா ஏற்பாட்டுக்குழுவின் தலைவருமான ஷென் ஹாய்சியொங் துவக்க விழாவில் உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், திரைப்படம் தோன்றிய கடந்த 120க்கும் மேலான ஆண்டுகளாக, உலகத்துக்கு அன்பு மற்றும் வலிமையை வழங்கி வருகிறது. தற்போது, பெய்ஜிங், ஷாங்காய், ச்சாங்ச்சுன், ஹாய்நான் ஆகிய 4 இடங்களுடன் சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்யும் 4 திரைப்பட விழாக்கள் வேறுபட்ட தனிச்சிறப்புடையவை. புதிய யுகத்தில் சீனத் திரைப்படத் துறையின் மாபெரும் வளர்ச்சியைச் சீன ஊடகக் குழுமம் முன்னேற்றுவதோடு நேரில் பார்த்து வருகிறது என்றார்.

1193 வெளிநாட்டுத் திரைப்படங்கள் உள்ளிட்ட 1450 திரைப்படங்கள் நடப்புத் திரைப்பட விழாவைச் சேர்ந்த “தியான்டான்” விருதுக்காகப் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்பட விழா 20ஆம் நாள் நிறைவுபெறவுள்ளது. அப்போது, “தியான்டான்” விருது பட்டியல் வெளியிடப்படும்.