லிதுவானியாவின் துணை அமைச்சர் ஒருவருக்கு சீனா தடை விதிப்பு
2022-08-13 19:05:58

லிதுவானியாவின் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத் துறையின் துணை அமைச்சர் அக்னே வைசியுகேவிசியூட் சீனாவின் தைவான் பகுதியில் பயணம் மேற்கொண்டு, ஒரே சீனா என்ற கொள்கையை அத்துமீறி, சீனாவின் உள்விவகாரத்தில் கடுமையாக தலையீடு செய்து, சீனாவின் இறையாண்மை மற்றும் உரிமை பிரதேசத்தின் ஒருமைப்பாட்டைச் சீர்குலைத்துள்ளார். அவரது இம்மோசமான செயலுக்கு எதிராக, அவரின் மீது தடை நடவடிக்கையை மேற்கொள்ளவும், அந்நாட்டின் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத் துறையுடனான தொடர்பை தற்காலிகமாக நிறுத்தவும், சர்வதேச சாலை போக்குவரத்து துறையில் அந்நாட்டுடனான ஒத்துழைப்பை தற்காலிகமாக நிறுத்தவும் சீனா தீர்மானித்துள்ளது.