வறட்சி நிலையை அறிவித்த பிரிட்டன்
2022-08-13 17:38:16

1935ஆம் ஆண்டிலிருந்து மிக வறட்சியான ஜுலை மாதத்துக்குப் பிறகு, இங்கிலந்தின் 14 பிரதேசங்களில் 8 பிரதேசங்கள் வறட்சி நிலையில் சிக்கியுள்ளன. 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலந்தில் வறட்சி ஏற்படுவது இதுவே முதன்முறை என்று பிரிட்டன் அரசு 12ஆம் நாள் தெரிவித்தது.

மேலும், இவ்வாண்டின் கோடைக்காலத்தில் 2ஆவது வெப்ப அலையால் ஏற்பட்ட தீவிர வானிலையை பிரிட்டன் எதிர்கொள்கிறது. பல இடங்களில் வெப்ப நிலை தீவிரமாக உயர்ந்துள்ளது. ஜுலையில் 40.2 டிகிரி செல்சியஸை எட்டிய வெப்ப நிலை, பிரிட்டனின் வரலாற்றில் புதிய உயர் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.