வேளாண் துறை வளர்ச்சிக்கு ஆயிரம் கோடி யுவான் நிதித் தொகை
2022-08-13 16:46:54

சீன விவசாய வளர்ச்சி வங்கியிலிருந்து ஆகஸ்டு 13ஆம் நாள் கிடைத்த தகவலின்படி, 12ஆம் நாள் வரை, விவசாய வளர்ச்சி உள்கட்டமைப்புக்கான நிதியின் மூலம் 1489.6 கோடி யுவான் 68 திட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நீர் சேமிப்பு, நீர்வழி போக்குவரத்து, நீர் மின் நிலையம், மாநில மற்றும் தேசிய நிலை தொழில் பூங்காவின் உள்கட்டமைப்பு, குளிர் சங்கிலி பொருள் புழக்க வசதி போன்ற துறைகளில் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டப்பணிகளுக்கு நிதியுதவி கிடைப்பதால், நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புக் கட்டுமானத்தின் மூலதனத் தேவை பயனுள்ள முறையில் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது.

விவசாய வளர்ச்சி உள்கட்டமைப்பு நிதி ஜுலை 20ஆம் நாள் நிறுவப்பட்டது. போக்குவரத்து, நீர் சேமிப்பு, எரியாற்றல் போன்ற தொடரமைப்பான உள்கட்டமைப்பு, தொழில் நிலை உயர்வுக்கான உள்கட்டமைப்பு, நகர உள்கட்டமைப்பு, வேளாண்மை மற்றும் கிராமப்புற உள்கட்டமைப்பு, தேசிய பாதுகாப்புக்கான உள்கட்டமைப்பு ஆகிய 5 முக்கிய துறைகளுக்கு இந்நிதி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.