சிரியாவில் எண்ணெயைச் சட்டவிரோதமாக எடுத்த அமெரிக்கா
2022-08-14 16:40:35

சிரிய செய்தி நிறுவனம் ஆகஸ்டு 13ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்கப் படை அன்று 89 வாகனங்களின் மூலம், சிரியாவின் வடக்கிழக்கு பகுதியில் சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட எண்ணெயை ஈராகிற்கு அனுப்பியது.

மேலும், அமெரிக்கப் படை 11ஆம் நாள், ஒரே மாதிரியில் 144 வாகனங்களின் மூலம் அது திருடிய எண்ணெயைக் கடத்திச் சென்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, சிரியாவின் வடக்கிழக்கு பகுதியிலுள்ள பல இடங்கள், சிரிய ஜனநாயகப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிரான சர்வதேச கூட்டமைப்பின் ஆதரவை இப்படை பெற்றுள்ளது. இக்கூட்டமைப்பு அமெரிக்காவின் தலைமையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக, அமெரிக்கப் படை சிரியாவின் வடக்கிழக்கு பகுதியில் எண்ணெயைத் திருடி கடத்திச் செல்வதாக சிரியா அரசு பலமுறை குற்றம் சாட்டியுள்ளது.