தைவான் பிரச்சினை பற்றி பல்வேறு நாடுகள் சீனாவுக்கு ஆதரவு
2022-08-14 16:49:04

சீன அரசவையின் தைவான் விவகார அலுவலகமும், தகவல் தொடர்பு பணியகமும் தைவான் பிரச்சினை மற்றும் புதிய யுகத்தில் சீனாவின் ஒன்றிணைப்பு இலட்சியம் என்ற வெள்ளையறிக்கையை ஆகஸ்டு 10ஆம் நாள் வெளியிட்டன. தைவான், சீனாவின் ஒரு பகுதியாகும். ஒரே சீனா என்ற கோட்பாடு, சர்வதேச சமூகத்தின் பொது கருத்தாகும். நாட்டின் ஒன்றிணைப்பு பற்றிய சீனாவின் வலிமைமிக்க மன உறுதியை இந்த வெள்ளையறிக்கை காட்டியுள்ளது என்று பல்வேறு நாடுகளின் பிரமுகர்கள் தெரிவித்தனர்.

ஈக்வேடார் முன்னாள் வெளியுறவு துணை அமைச்சர் கூறுகையில், பண்டைகாலத்தொட்டு, சீனாவின் ஒரு பகுதியாக தைவான் திகழ்கிறது. சர்வதேச உறவின் அடிப்படை கோட்பாடு பின்பற்றப்பட வேண்டும் என்றார்.

தென் கொரிய-சீன நட்புறவுச் சங்கத்தின் தலைவர் கூறுகையில், மெம்மேலும் பெரும் நாட்டின் ஆற்றல் கொண்ட சீனா, தைவான் பிரச்சினையைத் தீர்க்கும் நம்பிக்கை மற்றும் திறமை வாய்ந்தது என்றார்.

மேலும், மலேசியா, தான்சானியா, குரோவேஷியா, ஆப்பிரிக்கா, லாட்வியா, லெபனான், இந்தோனேசியா, கம்போடியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் சீனாவுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.