6வது பட்டுப்பாதை சர்வதேசப் பொருட்காட்சியின் துவக்க விழாவில் யாங் ஜியேச்சுயின் உரை
2022-08-14 16:50:00

6வது பட்டுப்பாதை பற்றிய சர்வதேசப் பொருட்காட்சியும், சீனாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதி ஒத்துழைப்புக்கான முதலீட்டு மற்றும் வர்த்தக மன்றக்கூட்டமும் ஆகஸ்டு 14ஆம் நாள் ஷி அன் நகரில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளிவிவகார ஆணைய அலுவலகத்தின் இயக்குநருமான யாங் ஜியேச்சு துவக்க விழாவில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவை முன்வைத்த 9 ஆண்டுகளில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ஒத்துழைப்பு மேடையாக மாறியுள்ளது. பல்வேறு தரப்புகள் ஒன்றுக்கொன்று உதவியளித்து, மனித குலத்தின் உயிர் ஆரோக்கியத்தைக் கூட்டாகப் பேணிக்காத்து, உலகப் பொருளாதாரத்தின் மீட்சியை முன்னேற்ற வேண்டும் என்றும், ஒரு பாதை மற்றும் ஒரு மண்டலம் கட்டுமானத்தின் மூலம் உலகம் மற்றும் பல்வேறு நாடுகளின் மக்களுக்கு நன்மை புரிய வேண்டும் என்றும் சீனா வேண்டுகோள் விடுத்தது என்றார்.