அகதிகள் பிரச்சினையைச் சமாளிக்கும் சர்வதேச ஒத்துழைப்பு
2022-08-14 16:32:44

துருக்கி, ஈரான், பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகள், ஆப்கானுடன் ஒத்துழைப்பு மேற்கொண்டு, ஆப்கான் அகதிகள் பிரச்சினையைக் கூட்டாகச் சமாளிக்க வேண்டும் என்று அந்நாட்டு தற்காலிக அரசின் அகதிகள் மற்றும் கடல் கடந்த மக்கள் அமைச்சகத்தின் தற்காலிக துணை அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

துருக்கியிலுள்ள ஆப்கான் அகதிகள் பிரச்சினையை விவாதிக்கும் விதம், துருக்கிக்கு பணி குழு ஒன்றை ஆப்கான் தற்காலிக அரசு அடுத்த வாரம் அனுப்பவுள்ளது. 2021ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவப் படை, ஆப்கானிஸ்தானிலிருந்து விலகிய போது, நிறைய ஆப்கான் மக்கள், துருக்கி, ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றனர். இப்போது வரை அவர்களில் பெரும்பாலானோர் சட்டப்பூர்வமான தகுநிலையைப் பெறவில்லை என்று அன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.