2022 சர்வதேச ராணுவ விளையாட்டுப் போட்டி துவங்கியது
2022-08-14 16:46:01

2022 சர்வதேச ராணுவ விளையாட்டுப் போட்டி ஆகஸ்ட் 13ஆம் நாள் சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் கோர்லா நகரில் துவங்கியது. சீனா, ரஷியா, பெராரஸ், ஈரான், வெனிசுலா ஆகிய 5 நாடுகளைச் சேர்ந்த 9 பிரதிநிதிக் குழுக்கள் இதில் கலந்துகொண்டுள்ளன.

ஆகஸ்ட் 13 முதல் 25ஆம் நாள் வரை, கோர்லா நகரில், ஸ்வோலோஃப் அதிரடி ராணுவ வாகனப் போட்டி, கண்ணிவெடி அகற்றுதல் ஆகிய இருப் பிரிவுகளின் 9 போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகள் நடைபெறும் காலத்தில், பண்பாட்டு பரிமாற்றம், சாதனக் கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.