பாகிஸ்தான் சுந்திரமடைந்த 75ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்
2022-08-15 16:28:24

பாகிஸ்தான் சுந்திரமடைந்த 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், பிரமாண்டமான சுதந்திர தின நிகழ்ச்சிகள் ஆகஸ்டு 14ஆம் நாள் அந்நாட்டில் நடத்தப்பட்டன.

அன்று பாகிஸ்தான் தலைமையமைச்சர் ஷாபாஸ் ஷெரீப் உரை நிகழ்த்திய போது கூறுகையில், மக்கள், குறிப்பாக பரந்துபட்ட இளைஞர்கள், பாகிஸ்தானின் மிக மாபெரும் ஆற்றலாகும். அனைத்து பாகிஸ்தான் மக்களும் ஒற்றுமையுடன், பாகிஸ்தான் பொருளாதார வல்லரசாக உருவாக்கப்படுவதை முன்னேற்ற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த சில நாட்களில், பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் வண்ணமயமான கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.