இந்திய தலைமை அமைச்சர் சுதந்திர தின உரையில் ஊழலுக்கு எதிராக போராட அழைப்பு விடுத்துள்ளார்
2022-08-15 18:23:35

இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, திங்கள்கிழமை தனது சுதந்திர தின உரையில், ஊழலுக்கும், குடும்ப அரசியலுக்கும் எதிராகப் போராட இந்திய மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

"ஊழலுக்கு எதிரான இந்த போராட்டத்தில் 130 கோடி இந்தியர்களின் ஒத்துழைப்பை நான் நாடுகிறேன்" என்றும், பல்வேறு துறைகளில் தகுதியான திறமையாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் குடும்ப அரசியல், ஊழலுக்கு ஒரு காரணமும் ஆகும் என்றும் மோடி கூறினார்.   

80 நிமிடங்களுக்கு மேல் நீடித்த தனது உரையில், நாட்டின் கட்டுமானம்,அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பெண்களின் மகத்தான பங்களிப்பையும் மோடி பாராட்டினார்.