சீனாவின் மஞ்சள் ஆறு மற்றும் யங்ட்ஸி ஆற்றின் மாற்றம்
2022-08-15 11:47:48

மஞ்சள் ஆறும் யங்ட்ஸி ஆறும் சீனத் தேசத்தின் தாய் ஆறுகள். அவற்றின் மீதான பாதுகாப்பு பற்றி சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் எப்போதும் கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்த 10 ஆண்டுகளில், மஞ்சள் ஆற்றைப் பாதுகாக்கும் விதமாக, உயிரினச் சூழல் மேம்பாடும் பாலைவனமாதல் கட்டுப்பாடு மற்றும் சோலை வளர்ப்பும் அங்கு அமலாக்கப்பட்டுள்ளன. அதே வேளை, மாசுகளை ஏற்படுத்தும் மூலத்தைக் கண்டறிந்து அதனைக் குறைத்து நகரங்களின் கழிவுநீர் சமாளிப்புத் திறனை வலுப்படுத்தியதன் மூலம், யங்ட்ஸி ஆறு  பாதுகாக்கப்பட்டுள்ளது. 

கடந்த 10 ஆண்டுகளில், மஞ்சள் ஆற்றுப் பள்ளத்தாக்கில் 26ஆயிரத்து 800 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் மண்ணரிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. யங்ட்ஸி ஆற்றுப் பள்ளதாக்கிலுள்ள வேதியியல் தொழிற்சாலைகள் நான்கில் ஒன்றுக்கு மேலே குறைந்துள்ளன. யங்ட்ஸி ஆற்றின் நெடுகிலுள்ள நகரக் கழிவுநீர் சமாளிப்பு ஆலைகள் ஒரு மடங்கு அதிகரித்துள்ளன.