நியூசிலாந்தின் கடற்பரப்பில் நிலநடுக்கம்
2022-08-15 10:17:45

நியூசிலாந்தின் வடக்கிழக்குப் பகுதியிலுள்ள கெர்மடெக் தீவுகளின் அருகே ஆகஸ்ட் 14ஆம் நாள் ரிக்டர் அளவு கோலில் 6.6ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. தற்போதுவரை உயிர் மற்றும் உடைமை இழப்பு பற்றிய தகவல் வெளியிடவில்லை.

நியூசிலாந்துக்கும் டொராங்காவுக்கும் இடையேயுள்ள கடற்பரப்பில் அமைந்துள்ள கெர்மடெக் தீவுகளில், பத்துக்கும் மேலான எரிமலை தீவுகள் உள்ளன. இதனால், நிலநடுக்கமும் எரிமலை வெடிப்பும் அங்கு அடிக்கடி நிகழும்.