தாங்ஷான் நகரில் மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல்
2022-08-15 17:12:36

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தாங்ஷான் நகரம், ஹேபெய் மாநிலத்தின் மிகப் பெரிய எக்கு நகரமாகும். முன்பு, இந்நகரத்தில் மாசுபாடு கடுமையாக இருந்தது.

கடந்த 10 ஆண்டுகளில், தொழிற்துறை கட்டமைப்பு மறுசீரமைப்பு, தூய்மையான எரியாற்றல் பயன்பாடு, இலையுதிர்காலம் மற்றும் குளிர்காலத்தில் காற்று மாசுபாட்டுத் தடுப்பு, பிரதேசக் கூட்டுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு ஆகிய நடவடிக்கைகள் இந்நகரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் பொது மக்களுக்கு உண்மையான மகிழ்ச்சியை வழங்கியுள்ளது.