அமெரிக்க செனெட் அவையின் உறுப்பினர்களின் தைவான் பயணம் பற்றிய சீன தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் கருத்து
2022-08-15 16:45:25

ஆகஸ்ட் 14ஆம் நாள் அமெரிக்க செனெட் அவையின் உறுப்பினர் மாகி உள்ளிட்டவர்கள், சீனாவின் தைவான் பிரதேசத்தில் பயணம் மேற்கொண்டனர். ஒரே சீனா என்ற கோட்பாட்டையும் 3 சீன-அமெரிக்க கூட்டறிக்கைகளையும் மீறிய செயல் இதுவே ஆகும். சீனாவின் இறையண்மையையும் உரிமை பிரதேச ஒருமைப்பாட்டையும் ஊறுபடுத்திய இச்செயல் தைவான் சுதந்திரவாதிகளுக்கு தவறான சமிக்கையை அனுப்பியது. தைவான் நீரிணையின் நிதானத்தையும் அமைதியையும் சீர்குலைப்பது அமெரிக்காவின் உண்மையான இலக்காகும் என்பதை இது வெளிகாட்டியுள்ளது. சீன மக்கள் விடுதலை படையின் கிழக்கு ராணுவப் பிரிவு, தைவான் தீவின் அருகில் மேற்கொண்ட ராணுவப் பயிற்சி அமெரிக்காவுக்கும் தைவானுக்குமிடையிலான தொடர்புக்கு உறுதியான பதிலடி என்பது குறிப்பிடத்தக்கது.