அமெரிக்க செனெட் அவை உறுப்பினர்களின் தைவான் பயணம் பற்றிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் கருத்து
2022-08-15 19:48:28

சீனாவின் கடுமையான எதிர்ப்பைப் பொருப்படுத்தாமல் அமெரிக்க செனெட் அவையின் உறுப்பினர் மார்கி உள்ளிட்டவர்கள், சீனாவின் தைவான் பிரதேசத்தில் பயணம் மேற்கொண்டனர். ஒரே சீனா என்ற கோட்பாட்டையும் 3 சீன-அமெரிக்க கூட்டறிக்கைகளையும் மீறிய இச்செயல், சீனாவின் இறையண்மையையும் உரிமை பிரதேச ஒருமைப்பாட்டையும் ஊறுபடுத்தி, தைவான் சுதந்திரவாதிகளுக்கு தவறான சமிக்கையை அனுப்பியது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் வாங் வென்பின் 15ஆம் நாள் தெரிவித்தார்.

சீனா ஒன்றிணைப்பை நனவாக்குவது, தடுக்கப்பட முடியாத வரலாற்று போக்காகவும் சீன  மக்களின் உறுதியான பொது விருப்பமாகவும் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.