ஒறுமை ஒழிப்புக்கான இடமாற்றத் திட்டத்தில் 96லட்சம் மக்களின் அருமையான வாழக்கை
2022-08-15 12:52:43

சீனாவின் வறுமை ஒழிப்புப் பணியில், மொத்தம் 9 கோடியே 89லட்சத்து 90ஆயிரம் மக்கள் தீவிர வறுமையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 96 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வறுமை ஒழிப்பின் இடமாற்ற திட்டத்தின் மூலமாக வறுமையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பிறகு மிகப் பெரிய அளவிலும் மிக அதிக மக்கள் தொகை கொண்ட இடமாற்றத் திட்டமாக இது விளங்குகிறது. இந்த திட்டமானது,  பெரிய மாற்றத்தை கொண்டு வந்ததோடு முன்பு வறிய நிலையில் சிக்கியிருந்த மக்களுக்கு பயன்களையும் கொண்டு வந்துள்ளது.

உதாரணமாக, தென்மேற்கிலுள்ள யுன்னான் மாநிலத்தின் ஃபுகோங் வட்டத்தில் 15 இடமாற்றத் திட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. செயற்கைக்கோள் மூலமாக, ஃபுகோங் வட்டத்திலுள்ள வறிய கிராமங்களில் கடந்த 10 ஆண்டுகளில் காணப்பட்ட  மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டன.

2011ஆம் ஆண்டு, ஃபுகோங்கின் டோவ்பிங் கிராமத்தில் சில வீடுகள் மற்றும் மண் சாலைகள் மட்டுமே இருந்தன. 2021ஆம்  ஆண்டு வரை,  6 மாடிகள் கொண்ட 8 குடியிருப்புக் கட்டிடங்கள், குழந்தைகள் காப்பகம், கால்பந்து மைதானம், 4ஜி தொலைத் தொடர்புக் கோபுரம், ஆற்று மேம்பாலம் ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சியுடன், டோவ்பிங் கிராமத்தில் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பெரிதும் மேம்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 10 ஆண்டுகளில், சீனாவின் மத்திய மற்றும் மேற்கிலுள்ள உயர்ந்த மலை, பாலைவனமாகுதல், பீடபூமியின் கடும் குளிர் போன்ற பகுதிகளில்  வறுமை ஒழிப்புக்கான இடமாற்றத் திட்டம் பெருமளவில் நடத்தப்பட்டது. நாடு முழுவதும், இந்த இடமாற்றத் திட்டத்திற்காகக் கிட்டத்தட்ட 35ஆயிரம் குடியிருப்புகள் கட்டியமைக்கப்பட்டன. 96 இலட்சம் வறிய மக்கள் தொகை இடமாற்ற திட்டத்தில் இணைந்து நவீன வசதிகள் கொண்ட வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.