வரலாற்று படிப்பினையை ஜப்பான் பெற வேண்டும்:சீனா
2022-08-15 19:18:14

ஜப்பானின் அரசியல் தலைவர்கள் யசுகுனி கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்திய எதிர்மறை செயல் குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் ஆகஸ்டு 15ஆம் நாள் கூறுகையில், தூதாண்மை வழிமுறையில் ஜப்பானுக்கு எதிர்ப்பையும் நிலைப்பாட்டையும் சீனா தெரிவித்துள்ளது. வரலாற்றுப் படிப்பினையிலிருந்து ஜப்பான் உணர்வுபூர்வமாகக் கற்றுக் கொண்டு, இராணுவ வெறியுடனான தொடர்பை முற்றிலும் துண்டிக்க வேண்டும் என சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது என்று தெரிவித்தார்.

77 ஆண்டுகளுக்கு முன் சீன மக்கள் உலக மக்களுடன் இணைந்து ஜப்பானின் ஆக்கிரமிப்பையும் பாசிசத்தையும் தோற்கடித்தனர். வரலாற்றை சரிவர நோக்கி ஆழ்ந்த முறையில் தற்சோதனை செய்வது என்பது, போருக்குப் பின் ஆசிய அண்டை நாடுகளுடன் ஜப்பான் இயல்பான உறவுகளை மீண்டும் வளர்ப்பதற்கான அவசிய முன்நிபந்தனையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.