அரசு தலைவர் தேர்தலில் போட்டியிடஜோ பைடன் திட்டம்
2022-08-15 10:14:20

அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடனுக்கான ஆதரவு விகிதம் வரலாற்றில் மிக குறைவாக உள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஆகஸ்ட் 14ஆம் நாள் கூறுகையில், பண வீக்கம் மற்றும் உயர்ந்த உற்பத்தி செலவு ஆகியவை, அரசு தீர்க்க வேண்டிய முதல் கடமைகளாகும். பணவீக்கத்தைக் குறைக்கும் மசோதா மூலம், அமெரிக்க மக்கள் எதிர்கொள்கின்ற பொருளாதார சிக்கல் பயனுள்ள முறையில் குறைக்கப்படக் கூடும் என்று தெரிவித்தார்.

தவிர, தனக்கு ஆதரவு விகிதம் வரலாற்றில் இல்லாத அளவில் குறைந்த போதிலும், 2024ஆம் ஆண்டில் அரசுத் தலைவர் தேர்தலில் தொடர்ந்து போட்டியிட ஜோ பைடன் திட்டமிட்டுள்ளார் என்றும் அவர் வலியுறுத்தினார்.