பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருட்களின் விலை மாற்றம்
2022-08-16 16:35:13

பாகிஸ்தான் அரசு ஆகஸ்டு 16ஆம் நாள் பெட்ரோல் விலையை அதிகரித்து, உயர்வேக டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலையைக் குறைத்துள்ளது.

பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருட்களின் விலை பல முறை சரிப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலை ஏற்றத்தாழ்வு மற்றும் நாணய மாற்று விகிதத்தின் மாற்றம் காரணமாக தற்போதைய பெட்ரோலிய பொருட்களின் விலையைச் சரிப்படுத்த அரசு தீர்மானித்துள்ளது என்று அந்நாட்டின் நிதி அமைச்சகம் தெரிவித்தது. மேலும், சர்வதேச நாணய நிதியத்துக்கு பாகிஸ்தான் அளித்த வாக்குறுதியின்படி, பெட்ரோல் மீது ஒரு லிட்டருக்கு 20 ரூபாய் வரியையும், உயர்வேக டீசல், மண்ணெண்ணெய் மற்றும் லேசான டீசல் ஆகியவற்றின் மீது ஒரு லிட்டருக்கு தலா 10 ரூபாய் வரியையும் அரசு வசூலிக்கிறது.