இலங்கையின் துறைமுகத்தில் தங்கிய யுவான்வாங்-5 ஆய்வுக் கப்பல்
2022-08-16 20:20:26

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் ஆகஸ்டு 16ஆம் நாள் கூறுகையில், யுவான்வாங்-5 ஆய்வுக் கப்பலின் கடல் ஆய்வு நிகழ்ச்சி சர்வதேசச் சட்டம் மற்றும் சர்வதேச நடைமுறை பழக்கவழக்கத்துக்குப் பொருந்தியது. எந்த ஒரு நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலனையும் இது பாதிக்காது. அத்துடன், பிற நாடுகள் இந்நிகழ்ச்சியில் தலையிடக்கூடாது என்றார்.

இந்த ஆய்வுக் கப்பல் ஆகஸ்டு 16 முதல் 22ஆம் நாள் வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தி, பொருட்களைப் பெறுவதற்கு இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதித்துள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அண்மையில் தெரிவித்தது.