ஐ.நா. நிபுணர்களின் விமர்சனம் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை:சீனா
2022-08-16 18:43:40

அனைத்து வடிவிலான இனப் பாகுபாடுகளையும் நீக்குவதற்கான சர்வதேச பொது உடன்படிக்கையை அமெரிக்கா செயல்படுத்திய நிலைமை பற்றி இனப் பாகுபாட்டை நீக்குவதற்கான ஐ.நா. கமிட்டி அண்மையில் பரிசீலனை செய்தது. இது பற்றிய வெளிப்படையான பதிவுகளின்படி, ஐ.நா. நிபுணர்கள் இப்பரிசீலனைப் போக்கில் அமெரிக்காவில் ஆழப்பதிந்துள்ள இனப் பாகுபாடு குறித்து குறைகூறியுள்ளனர்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் ஆகஸ்ட் 16ஆம் நாள் கூறுகையில், அனைத்து வடிவிலான இனப் பாகுபாடுகளையும் நீக்குவதற்கான சர்வதேச பொது உடன்படிக்கையில் கையொப்பமிட்ட அமெரிக்கா, மற்ற நாடுகளின் இனப் பாகுபாடு பற்றி பொய் மற்றும் வதந்திகளை நீண்டகாலமாக பரப்பி வருவதோடு, இதனை அதன் மேலாதிக்கம் மற்றும் அரசியல் தலையீட்டுக்கான கருவியாகவும் பயன்படுத்தி வருகிறது. கடும் நோய் போன்ற தனது இனப் பாகுபாட்டை அமெரிக்கா ஒருபோதும் சரியாக பார்க்கவில்லை. இப்பிரச்சினை மீதான ஐ.நாவின் பரிசீலனை அமெரிக்க அரசுக்கு மீண்டும் ஒரு முறை விடுத்த எச்சரிக்கை ஆகும் என்று தெரிவித்தார்.