அமெரிக்காவின் உற்பத்திக் குறியீடு பெரும் சரிவு
2022-08-16 10:35:13

ஆகஸ்ட் திங்களில் நியூயார்க்கின் ஃபிடெரல் ரிசர்வ் வங்கியின் உற்பத்திக் குறியீடு, கிட்டத்தட்ட 42 புள்ளிகள் குறைந்து, பூஜியத்துக்கு கீழ் 31.3ஆக சரிந்துள்ளது. ஜுலை திங்களில் இந்த குறியீடு 11.1ஆகப் பதிவாகியுள்ளது. 2020ஆம் ஆண்டு மே திங்களுக்குப் பிறகு ஏற்பட்ட மிக குறைந்த பதிவு இதுவாகும். இதற்கு முன்பு, மிக பெரிய சரிவு, 2020ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் கண்டுள்ளது. அப்போது, கோவிட்-19 பரவல் காரணமாக, அமெரிக்கப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

உள்நாட்டில் பலவீனமான தேவை,  உயர்ந்த பணவீக்கம்,  வட்டி விகிதம் அதிகரிப்பு ஆகியவை,  அமெரிக்காவின் உற்பத்தித்துறை வளர்ச்சிக்கு தடையாக அமையும்.

இந்த உற்பத்திக் குறியீடு 0ஆக இருக்கும் போது, பொருளாதாரம் சுருங்கி வருகிறது என்று பொருள்படுகிறது. 15ஆம் நாள் புதிதகாக வெளியிடப்பட்ட இந்த குறியீடு, அமெரிக்கப் பொருளாதார கொந்தளிப்பை வெளிக்காட்டுகிறது என்று சி.என்.என் தொலக்காட்சி நிறுவனம் தெரிவித்தது.