ராணுவவாதத்தை அவிழ்த்து விடுவதை ஜப்பான் நிறுத்த வேண்டும்
2022-08-16 16:51:12

இவ்வாண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள், ஜப்பான் 2ஆம் உலகப் போரில் தோல்வியடைந்து நிபந்தனையின்றி சரணடைந்ததாக அறிவித்ததன் 77ஆவது ஆண்டு நிறைவு நாளாகும். ஆனால், போருக்குப் பிந்தைய அரசியல்அமைப்பு சட்டத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க முயலும் விதமாக ராணுவவாதம் ஜப்பானில் எழுவது போல காணப்படுகிறது. இதுவே, உலகிற்கு கவலை தருகிறது.

முன்னதாக, 2022ஆம் ஆண்டுக்கான ஜப்பானின் தற்காப்பு வெள்ளையறிக்கை அமைச்சரவைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சுற்றுப்புறத்தில் பாதுகாப்பு அறைகூவல்  தீவிரமாகி வருவதால், ஜப்பான் தற்காப்புக்கான வரவுச்செலவை அதிகரித்து தற்காப்புத் திறனை பெருமளவில் வலுப்படுத்த வேண்டியது அவசியமானது என்று இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியது. மேலும், ஜப்பானின் வலது சாரி, தைவான் பிரச்சினையைச் சாக்குபோக்காகக் கொண்டு, ஜப்பானிய இராணுவத்தை “இயல்பாக” மாற்றுவதற்கான முன்னேற்றப் போக்கை விரைவுபடுத்த முயன்றுள்ளது தெளிவாகக் காணப்படலாம்.

வரலாற்றுப் பிரச்சினையை எப்படி கையாண்டு தீர்ப்பது என்று ஜப்பான் யோசிக்க வேண்டும் என்றும், பிராந்திய அமைதி மற்றும் வளர்ச்சியில் ஆக்கப்பூர்வமாக பங்கேற்க வேண்டும் என்றும் சிங்கப்பூர் தலைமை அமைச்சர் லீ சியன் லூங் கடந்த மே திங்கள் ஜப்பானில் பயணம் மேற்கொண்ட போது ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஆசியாவின் அண்டை நாடுகளுக்குக் கொண்டு வந்த சீர்குலைவுகளை, ஜப்பானிய அரசியல்வாதிகள் மறக்க கூடாது. வரலாற்றைப் படிப்பினையாகக் கொண்டு தற்சோதனை செய்து ராணுவவாதத்தை அவிழ்த்து விடும் அபாயமான செயலை நிறுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.