சீராக முன்னேறி வரும் சீனப் பொருளாதாரம்
2022-08-16 09:52:06

அதிகாரப்பூர்வமான தரவுகளின்படி, இவ்வாண்டு முற்பாதியில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, கடந்த ஆண்டில் இருந்ததை விட 2.5 விழுக்காடு அதிகரித்தது. ஜுலை திங்கள், மேலும் சிக்கலான சர்வதேச நிலைமை, உலகப் பொருளாதார மீட்சியின் மந்த நிலை, உள்நாட்டில் நோய் பரவல் தொடர்ச்சி, பாதகமான வானிலை முதலியவற்றைச் சந்தித்த போதிலும், சீனப் பொருளாதாரம் தொடர்ந்து சீரான வளர்ச்சி அடைவது, அரிதாக உள்ளது.

இது குறித்து பிரான்ஸின் சிந்தனை கிடங்கான ஷீலர் நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளரும், சர்வதேசப் பிரச்சினைக்கான நிபுணருமான செபாஸ்தியன் பெரிமோனி குறிப்பிடுகையில், உக்ரைன் மோதலால், உலகப் பொருளாதார மீட்சி பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகி விட்டது. சில நாடுகளில், உயர் பணவீக்கம் மற்றும் குறைந்த அதிகரிப்பு ஏற்படுவது, பன்னாட்டுப் பொருளாதாரம், வேலை வாய்ப்பு, நுகர்வு முதலியவற்றுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நிலையாக வளர்ந்து வரும் சீனப் பொருளாதாரம், உலகிற்கு அளிக்கும் உறுதி தன்மை மதிப்புக்குரியது என்று தெரிவித்தார்.