ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வளரும் நாட்டுத் தூதர்களுடன் வாங்யீ சந்திப்பு
2022-08-16 16:58:22

ஜெனீவாவிலுள்ள ஐ.நா அலுவலகத்துக்கான ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வளரும் நாடுகளின் தூதர்கள் சீனாவில் பயணம் மேற்கொண்ட போது, சீன அரசைவையின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ ஆகஸ்டு 15ஆம் நாள் காணொளி வழியாக அவர்களுடன் சந்திப்பு நடத்தினார்.

வாங்யீ கூறுகையில், மனிதக் குலப் பொது எதிர்காலச் சமூகம் என்ற பொது கருத்தைப் பின்பற்றி, வளரும் நாடுகளுடன் ஒத்துழைத்து, கூட்டு வளர்ச்சி மற்றும் செழுமையை நனவாக்க சீனா விரும்புகிறது என்றார்.

மேலும், கொந்தளிப்பான சர்வதேச சூழ்நிலையில், ஐ.நாவை மையமாகக் கொண்ட சர்வதேச அமைப்புமுறை, சர்வதேசச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கு, ஐ.நா சாசனத்தின் குறிக்கோளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச உறவின் அடிப்படைக் கோட்பாடு ஆகியவற்றை உறுதியாகப் பேணிக்காக்க வேண்டும் என்றும் வாங்யீ தெரிவித்தார்.

தவிரவும், தைவான் பிரச்சினை பற்றிய சீனாவின் உறுதியான நிலைப்பாட்டையும் வாங்யீ எடுத்துக்காட்டினார்.

சீனா பெற்றுள்ள சாதனைகளுக்கும், வளர்ச்சி மற்றும் சமூகச் சமத்துவத்தை முன்னேற்றுவதற்கான சீனாவின் பங்குகளுக்கும் தூதர்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும், ஒரே சீனா என்ற கோட்பாடு சர்வதேசச் சமூகத்தின் பொது கருத்தாகும். தைவான் மற்றும் சின்ஜியாங் ஆகியவை, சீனாவின் அங்கங்களாகும். சீனாவின் உள்விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடக்கூடாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.