தலைசிறந்த கட்டத்தில் இருக்கும் சீனாவின் மனித உரிமை நிலைமை
2022-08-17 17:11:24

 

கடந்த 10 ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சி பற்றி சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறை ஆகஸ்ட் 17ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், புதிய யுகத்தில் சீனாவின் தேசிய இன ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகள் மற்றும் சாதனைகள் பற்றி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய இன விவகார ஆணையத்தின் துணைத் தலைவர் சாவ் யொங் கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு, சீனாவின் தேசிய இன ஒற்றுமை மற்றும் முன்னேற்ற இலட்சியம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புதிய சாதனைகளைப் பெற்றுள்ளது. நாட்டின் சிறுபான்மை தேசிய இன மனித உரிமை நிலைமை வரலாற்றில் மிகச் சிறந்த காலக்கட்டத்தில் உள்ளது என்று குறிப்பிட்டார்.

தேசிய இனப் பகுதிகளிலுள்ள 3 கோடியே 12 லட்சத்து 10 ஆயிரம் ஏழை மக்கள் அனைவரும் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள நகர மற்றும் கிராமவாசிகளின் தனிநபர் வரி போக வருமானம் ஆண்டுக்கு சராசரியாக 7.7 மற்றும் 10.2 விழுக்காடு அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் திபெத் மக்களின் சராசரி ஆயுள்காலம் 4 ஆண்டுகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது என்று சாவ் யோங் அறிமுகப்படுத்தினார்.

அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி கூறுகையில், தொழில் வளர்ச்சி, உள்கட்டமைப்பு, இயற்கைச் சூழல் ஆகிய மூன்று முக்கிய துறைகளின் மூலம் தேசிய இனப் பகுதியின் உயர்தர வளர்ச்சியை முன்னேற்றி, வேறுபட்ட பிரதேச ஆதரவுக் கொள்கையை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.