நேபாளத்திலுள்ள 2வது கன்பிஃசியெஸ் கழகம்
2022-08-17 16:10:31

திரிபுவன் பல்கலைக்கழகத்திலுள்ள கன்பியூஃசியஸ் கழகம் நேபாளத்திலுள்ள 2வது கன்பியூஃசியஸ் கழகமாக ஆகஸ்டு 16ஆம் நாள் திறக்கப்பட்டது.

நேபாள கல்வி அறிவியல் மற்றும் தொழில் நுட்த் துறை அமைச்சர் தேவேந்திர பாடெல் காணொளி வழியாக உரை நிகழ்த்துகையில், பண்பாட்டுப் பரிமாற்றம் மற்றும் இரு தரப்பு ஒத்துழைப்புக்கு கன்பியூஃசியஸ் கழகம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என விரும்புவதாகத் தெரிவித்தார்.

சீனாவுக்கான நேபாளத்தின் முன்னாள் தூதர் லீலமணி பௌடியால் கூறுகையில், நேபாளத்தின் பல துறைகளுக்கு சீன மொழி முக்கியமானது. நேபாளத்தைப் பொறுத்தவரை, சீனாவின் வளர்ச்சி ஒரு வாய்ப்பாகும் என்றார்.

இதுவரை, நேபாளத்திலுள்ள 2 கன்பியூஃசியஸ் கழகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அந்நாட்டின் சுற்றுலா, உள்கட்டமைப்பு, வணிக மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளுக்கு இதன் மூலம் அதிகமான திறமைசாலிகள் வளர்க்கப்பட்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.