மேலை நாடுகளில் கடும் வறட்சி ஏற்பட்டது
2022-08-17 11:23:05

ஐரோப்பாவில் முந்தைய 500 ஆண்டுகளில் கண்டிராத மிகக் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியம் 16ஆம் நாள் தெரிவித்தது. அதன் செய்தித்தொடர்பாளர் பால்க் கூறுகையில், 2018ம் ஆண்டு ஐரோப்பாவில் ஏற்பட்ட வறட்சி, 1540ம் ஆண்டுக்குப் பிறகு நிகழ்ந்த மிக கடுமையான வறட்சியாகும். ஆனால், தற்போதைய தரவுகளின்படி இவ்வாண்டின் வறட்சி, 2018ம் ஆண்டை விட மேலும் மோசமாக உள்ளது என்று தெரிவித்தார். வானிலைப் பதிவு செய்யத் தொடங்கப்பட்டது முதல், உலக வரலாற்றின் மிக வெப்பமான மூன்று ஜுலை மாதங்களில் இவ்வாண்டு ஜுலை மாதமும் உள்ளது என்று உலக வானிலை அமைப்பு அண்மையில் தெரிவித்தது.

அதே போல, அமெரிக்க வறட்சி கண்காணிப்பு நிறுவனத்தின் தரவுகளின்படி, 11ஆம் நாள் வரை மேற்கு அமெரிக்காவின் 70 விழுக்காட்டுப் பகுதிகள் வறட்சி நிலையில் உள்ளன. சுமார் 3 இலட்சம் சதுர மைல் நிலம், “தீவிரம்”அல்லது“இயல்பற்ற”வறட்சியில் இருப்பதாகக் கருதப்படுகிறது. மிக மோசமான வறட்சி மதிப்பீடு இதுவாகும் என்று குறிப்பிடப்பட்டது.