போர் தொடுக்கும் வெறியை அமெரிக்கா கைவிட வேண்டும்
2022-08-17 11:30:16

அமெரிக்கா எங்களுக்குத் துரோகம் செய்துள்ளது. ஜோ பைடன் இன்னல்களைத் தீவிரமாக்கியுள்ளார் என்று 9 ஆப்கானிஸ்தான் மக்கள் GRID எனும் அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச செய்தி இணையத்தளத்துக்கு பேட்டியளித்த போது தெரிவித்தனர். அவர்கள், கடந்த ஓராண்டில் வாழ்க்கையில் எதிர்கொண்ட துன்பங்களையும் அமெரிக்கா மீதான கோபத்தையும் வெளிப்படுத்தினர். 

ஆப்கன் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை உள்ளூர் நெருக்கடியைத் தீவிரமாக்கியுள்ளது. 98விழுக்காடு ஆப்கன் மக்கள் உணவுப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளர். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் சுமார் 50விழுக்காட்டினர் கடும் ஊட்டச்சத்து குறைபாட்டில் சிக்கிக்கொள்வர் என்று ஐ.நா உலக உணவுத் திட்ட அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.

ஆப்கன் மத்திய வங்கியின் 700கோடி டாலர் சொத்துக்களை அமெரிக்கா முடக்கி வைத்துள்ளது. கடந்த ஜூலை இறுதியில், பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் அமெரிக்கப் படை காபூலில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. ஆப்கன் முழு நாட்டிலும் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஆப்கன் இன்னல்களுக்குக் காரணமான அமெரிக்கா அதன் குற்றப்பொறுப்பைத் தட்டிக்கழிக்கக் கூடாது. இந்தப் போரின் படிப்பினைகளை அமெரிக்கா நன்கு நினைவுபடுத்தி போர் தொடுக்கும் வெறியைக் கைவிட வேண்டும். தொடர்ந்து பிடிவாதமாக செயல்பட்டால், காபூலில் ஏற்பட்டது போன்ற மேலதிக இன்னல்கள் ஏற்படக் கூடும்.