மேலை நாடுகளின் மேலாதிக்கத்தின் மீது புதினின் கருத்து
2022-08-17 16:40:02

இதர நாடுகளைக் கட்டுப்படுத்தி, தனது மேலாதிக்கத்தை பேணிக்காக்கும் விதம், மேலை நாடுகள், குழப்பத்தையும் மோதலையும் ஏற்படுத்துவதன் மூலம், இதர நாடுகளின் வளர்ச்சி பாதையைச் சீர்குலைத்து வருகின்றது என்று ரஷிய அரசுத் தலைவர் பதின் 10ஆவது மாஸ்கோ சர்வதேச பாதுகாப்பு கூட்டத்தில்  தெரிவித்தார்.

உக்ரைன் அரசுத் தலைவர் மாளிகையின் இணையதளம் வெளியிட்ட செய்தியின் படி, உக்ரைன் அரசுத் தலைவர் செலென்ஸ்கி 15ஆம் நாள் கூறுகையில்,

சபோரோஜியே அணு மின் நிலையத்தின் சுற்றுப்புறப் பகுதியின் மீதான ரஷிய ராணுவப் படையின் பீரங்கி தாக்குதல் தொடர்கிறது என்று தெரிவித்தார். ரஷியா மற்றும் அதன் அணு ஆற்றல் தொழிலின் மீது புதிய தடை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்ததோடு, ரஷிய ராணுவப் படை நிபந்தனையின்றி, சபோரோஜியே அணு மின் நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியிலிருந்து உடனே விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.