ஒரே சீனா கொள்கையை அமெரிக்கா செயல்படுத்த வேண்டும்:சீனா
2022-08-17 18:40:30

40 ஆண்டுகளுக்கு முந்தைய ஆகஸ்டு 17ஆம் நாள் சீனா-அமெரிக்கா இடையேயான ஆகஸ்டு 17 கூட்டறிக்கை கையெழுத்தானது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், வரலாற்று அனுபவங்கள் மற்றும் படிப்பினைகளை அமெரிக்கா மீளாய்வு செய்து, ஒரே சீனா என்ற கொள்கையை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். தவறான பாதையில் தொடர்ந்து செயல்படக் கூடாது என்று தெரிவித்தார்.

சீனா-அமெரிக்கா இடையேயான ஆகஸ்டு 17 கூட்டறிக்கை, ஷாங்காய் கூட்டறிக்கை, தூதாண்மை கூட்டறிக்கை ஆகிய 3 கூட்டறிக்கைகள், சீன-அமெரிக்க உறவின் அரசியல் அடிப்படையாகும். ஒரே சீனா என்ற கொள்கை அவற்றின் மைய அம்சமாகும் என்றும் அவர் கூறினார்.

ஒரே சீனா கொள்கையை மீறி, தைவான் சுதந்திரச் சக்தியுடன் இணைந்து சதி செய்து, பிரிவினை நடவடிக்கைகளைத் தூண்டி ஆதரிக்கும் அமெரிக்கா, தைவான் நீரிணையின் நெருக்கடி நிலைமை தீவிரமாவதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.