புதினின் கண்டனத்தின் மீது சீனாவின் பாராட்டு
2022-08-17 18:41:41

16ஆம் நாள் 10ஆவது மாஸ்கோ சர்வதேச பாதுகாப்பு கூட்டத்தில் கலந்துகொண்ட ரஷிய அரசுத் தலைவர் புதின் கூறுகையில்,

பெலோசியின் தைவான் பயணம், பொறுப்பு ஏற்காத அரசியல்வாதியின் தவறான நடவடிக்கை மட்டுமல்ல, நேர்த்தியாக திட்டமிட்ட ஆத்திரமூட்டல் நடவடிக்கையும் ஆகும் என்றார்.

புதினின் இக்கருத்தை சீனா உயர்வாக பாரட்டுகின்றது என்று 17ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்தார்.

பெலோசி தைவானில் பயணம் மேற்கொண்ட பிறகு, 170க்கு மேலான நாடுகள் அவருக்கு எதிர்ப்பும் சீனாவுக்கு ஆதரவும் தெரிவித்துள்ளன. சர்வதேச சமூகத்துடன் இணைந்து, ஐ.நா சாசனத்தின் குறிக்கோள்ளையும் கோட்பாட்டையும் பேணிக்காத்து, பிரதேச மற்றும் உலகின் அமைதியையும் நிதானத்தையும் பாதுகாக்க சீனா விரும்புகின்றது என்று வாங் வென்பின் தெரிவித்தார்.